புத்தாண்டு வாழ்த்து 2014

புத்தாண்டே வருக
புத்தாண்டே வருக !

புன்னைகையுடன் வருக
பன்னகையும் தருக

சென்ற ஆண்டின் நிகழ்சிகள் நினைவாகிட !
நின்றிட உதவும் காலச் சுவடாகிட !

விதைத்தவன் நெஞ்சில் மகிழ்ச்சிப் பயிரோ
முப்போகம் விளைந்து ஊரும் செழித்திட
கதைக்கின்றோம் கவிதை ஒன்று கேட்க
காவிரி வெள்ளம்போல் பாய்ந்தோடி வருக !

அள்ளக் குறையா இன்பம் உலகத்தாருக்கு
அன்பின் வழியாய் அருளிட வருக !
தெள்ளமுதுக் கவிகள் செய்யும் எங்கள்
தேவைகள் தீர்க்க உடனே வருக !

மாற்றம் ஒன்றே நிலையென உணர்த்தி
மாற்றிட வருக இப்புவி மக்களை
தூற்றிட வருக துன்பம் அனைத்தையும்
துடைத்திட வருக தீமைகளை !

மார்கழி மாதத்தில் உதய சூரியனாய்
மகிழ்ச்சி வெள்ளம் தருகும் சந்திரனாய்
பார்களி யுறவே மண்மீதினிலே
பவனி வருகவே புதுப் பேரரசே !

-விவேக்பாரதி
01.01.2014

Comments

Popular Posts