புத்தாண்டு வாழ்த்து 2016

இரண்டாயி ரத்துப் பதினைந்தா மாண்டும்
   இனிதாகக் கொடுத்த தெல்லாம்
திரளாக நம்மில் திணவோடு நெஞ்சில்
   திமிராட்டம் போடும் நேரம்
வரமாக இங்கே வருகின்றாள் கன்னி
   வளமான புத்தான் டென்றே
தரமான எண்ணம் தலைமீது கொள்வோம்
   தருவாளே யாவும் நன்றே !

சிலபேர்க்கும் இந்தப் புத்தாண்டி னிக்கும்
   சிலபேர்க்கோ இனிமை குன்றும்
சிலபேர்க்கு நல்ல விடியல்கள் நேரும்
   சிலபேர்க்கோ இரவு சூழும்
சிலபேர்க்கு தெய்வம் சிறந்தவை நல்கும்
   சிலபேரின் மடமை கொல்லும்
உலகத்தில் உண்மை அதுகொண்டால் வாழும்
   ஒருநாளும் புத்தான் டன்றோ !

-விவேக்பாரதி
31.12.2015

Comments

Popular Posts