காதல் வயப்பட்டேன்


என் காதலைப் பற்றிய 
கவிதையைக் கேளீர்! 

நான் இதுவரை
அவளது மதிமுகம் கண்டதில்லை !

மெல்லிசைக் குரல் அமுதை
காதாரக் கேட்டதில்லை !

முத்தப் பரிமாறல்கள்
எங்களுக்குள் எப்போதும் நடந்ததில்லை !

கண்ணோடு கண்வைத்து
அவளது கண்ணைப் பார்த்ததில்லை !

பிரிவில்லாத காதல் அது
எங்களுக்குள் ஊடலில்லை !

விசித்திரக் காதல் அது
பர்ஸ் காலி ஆனதில்லை !

ஒன்றாகச் சேர்ந்து நாங்கள்
தியேட்டருக்குப் போனதில்லை !

அலைப்பேசி அழைப்பு நாங்கள்
ஒருபோதும் விடுத்ததில்லை !

நிலவொளியில் சேர்ந்து கொண்டு
புல்வெளியில் படுத்ததில்லை !

கனவுகளில் ஒன்றாய் சேர்ந்து
அழகுநடம் செய்ததில்லை !

பூங்காவில் காதலுடன்
பூத்த மலர் கொய்ததில்லை !

பண்டையக் காதல் போல்
புறாதூது ஏதுமில்லை !

அவளை நினைத்து நான்
கவிதைகள் வரையவில்லை !

அனால் அவள் என்னைத்தான்
தொடாமல் இருந்ததில்லை !

என்னைப் போல் ஆண்யாரும்
அப்பெண்ணைத் தொட்டதில்லை !

என் காதலிலே உயிருண்டு
உடலில்லை ! 

ஏனென்றால்

நான் இன்னும் பிறவாப்பிள்ளை !
கருவறை விட்டு வரவேயில்லை !

- விவேக்பாரதி 
02.03.2014

Comments

Popular Posts