கடல் கூடம்

கலைகள் பயில்வோம்
கடல் அலைகளில்
ஆம்
கட்டுமரங்கள் எங்கள்
கல்விக் கூடம் !

பகலவன் கூரை !
பழகிடத் தென்றல் !
படுத்து உறங்கிட
பாய்மரக் கட்டில் !

கடலில் உள்ளே
மூச்சுப் பிடித்து
முக்குளித்தல்
ஒரு முழுநிலை யோகம் !

வளர் கடல் தன்னில்
வலை அது வீசி
மீன்களால்
வயிற்றை நிறைத்தல்
வாழ்வின் கணிதம் !

நள்ளிரவில் மீன்பிடித்து
நாடு திரும்பும் பொழுது
கடத்தப்பட்டுப் பின்
பிழைப்பது
நாங்கள் பள்ளியில்
சந்திக்கும் தேர்வு !

வினாத்தாள் அரசிடம்
விடைத்தாள் யாரிடம் ???

-விவேக்பாரதி
01.11.2013

Comments

Popular Posts