பேதைகள் மாயாரோ ??

கண்ணே ! கனியமுதே ! கற்கண்டே ! என்றன்று
பெண்ணைப் புகழ்ந்தார் பெருந்தமிழ்ப் பாவலர்கள் !
மண்ணினில் இன்றோ மதிகெட்டுப் புத்தியின்றிப்
பெண்ணை இழிவுசெயும் பிற்போக்குப் பாட்டெழுதிப்
பண்ணை அமைக்கின்றார் பாழ்கயவர் ! ஐயகோ !
உண்மை உணர்வின்றி உள்ளத் துணிவின்றி
எண்ணத்தி னாலும் எடுக்கும் செயலாலும்
பெண்ணை மிதிக்கின்ற பேதைகள்தாம் மாயாரோ?

-விவேக்பாரதி
21.12.2015

Comments

Popular Posts