சேமித்தல் இன்பம்


சிறுதுளி சேர்ந்தால் இங்கே
பெருவெள்ளம் ஆகுமேடா!
மனமது நீயும் வைத்தால் - சேமிக்கக்
கணமொன்று போதுமேடா!

பணமெனும் கானல் நீர்தான்
மறைந்து உடன் போகும் முன்னே - நற்
குணத்துடன்  அதையே நீயும்
சேமித்து வைப்பாய்க் கண்ணே!!

#பூர்வாங்கம்

-விவேக்பாரதி
24.05.2013

Comments

Popular Posts