ஒதுங்காதே

கட்டுக்குள் அடங்காக் காதல்
   காவிரிநன் நீராய்ப் பாயும் !
விட்டொதுக்கு நாண மென்னும்
   வெளித்திரையை ! நானுன் வெள்ளிப்
பட்டுப்பூ உடலின் மேலே
   பசிகொண்ட தேனீ போலே
ஒட்டிடத்தான் ஆசை யுண்டு  !
   ஒதுங்காதே என்னைக் கண்டு

-விவேக்பாரதி
22.05.2014

Comments

Popular Posts