தாயன்பு
தாயன்பு போலே இத்தரணி தனிலே
தரமான பொருள் ஒன்றும் இல்லையடா !
நோயடைப் பட்டது தீருவதற்கும் அதைவிட
நோன்பும் மருந்தும் இல்லையடா !
வாயற்ற சீவன்கள் கூடத்
தாயன்பைப் பிரிந்து வாழுதல் செய்யாதே !
தாயவள் அன்பை மானிடா நீமட்டும்
மறந்து வாழ்ந்து மாய்வது ஏனடா ?
காயது பழமாகிக் கீழே விழும்வரை
கிளைக்கு அது ஒன்றும் பாரமில்லை !
சேயவன் நீமட்டும் தாயன்பைப் பேணினால்
சகத்தினிலே வளர்ந்த முதியோர் இல்லமெல்லாம் ,
வாயடைத்துப் போகும் இதுதான் உண்மை !
வாயில் கதவுகள் மூடும்நிலை உண்மை !
-விவேக்பாரதி
09.01.2014
தரமான பொருள் ஒன்றும் இல்லையடா !
நோயடைப் பட்டது தீருவதற்கும் அதைவிட
நோன்பும் மருந்தும் இல்லையடா !
வாயற்ற சீவன்கள் கூடத்
தாயன்பைப் பிரிந்து வாழுதல் செய்யாதே !
தாயவள் அன்பை மானிடா நீமட்டும்
மறந்து வாழ்ந்து மாய்வது ஏனடா ?
காயது பழமாகிக் கீழே விழும்வரை
கிளைக்கு அது ஒன்றும் பாரமில்லை !
சேயவன் நீமட்டும் தாயன்பைப் பேணினால்
சகத்தினிலே வளர்ந்த முதியோர் இல்லமெல்லாம் ,
வாயடைத்துப் போகும் இதுதான் உண்மை !
வாயில் கதவுகள் மூடும்நிலை உண்மை !
-விவேக்பாரதி
09.01.2014
Comments
Post a Comment