கவிதைக் குறள்
மனதில் விரியும் மலரே கவிதை !
தினமும் அதனைத் துதி !
சிறுகச் சிறுக இதயம் திருடும்
இறைவன் அருளே கவி !
உள்ளம் உரைக்கும் உணர்வை எழுதிடும்
வெள்ளக் கலையே கவி !
கற்பனைப் பெண்ணின் கருவே கவிதை
சொற்களின் கோவை கவி !
அறிவில் உதிக்கும் அழகே கவிதை !
அறிந்தோர் எழுதும் கவி !
உண்மை உரைக்கும் உயர்வு கவிதையே !
எண்ணம் இனிக்க எழுது !
ஆற்றல் பெருக்கும் அருவி கவிதையே !
காற்றினைப் போல்செய் கவி !
அழகைச் சுமக்கும் உருவே கவிதை !
பழகிக் கவிதை பயில் !
மொழிகள் சுவைக்கும் முறையே கவிதை !
பழிக்கா(து) இதனைப் பழகு!
பத்தும் நிகழ்த்தும் பொருளே கவிதை!நீ
கத்தி உரைப்பாய் கவி !
-விவேக்பாரதி
26.02.2015
தினமும் அதனைத் துதி !
சிறுகச் சிறுக இதயம் திருடும்
இறைவன் அருளே கவி !
உள்ளம் உரைக்கும் உணர்வை எழுதிடும்
வெள்ளக் கலையே கவி !
கற்பனைப் பெண்ணின் கருவே கவிதை
சொற்களின் கோவை கவி !
அறிவில் உதிக்கும் அழகே கவிதை !
அறிந்தோர் எழுதும் கவி !
உண்மை உரைக்கும் உயர்வு கவிதையே !
எண்ணம் இனிக்க எழுது !
ஆற்றல் பெருக்கும் அருவி கவிதையே !
காற்றினைப் போல்செய் கவி !
அழகைச் சுமக்கும் உருவே கவிதை !
பழகிக் கவிதை பயில் !
மொழிகள் சுவைக்கும் முறையே கவிதை !
பழிக்கா(து) இதனைப் பழகு!
பத்தும் நிகழ்த்தும் பொருளே கவிதை!நீ
கத்தி உரைப்பாய் கவி !
-விவேக்பாரதி
26.02.2015
Comments
Post a Comment