குழந்தைப் பாடல் - ச்சோட்டா பீம்

அம்மா இங்கே வந்துவிடு
போகோ தன்னைப் போட்டுவிடு
சும்மா அங்கே வேலையென்ன
சோட்டா பீமைப் பார்க்கணுமே !

அக்கா பாட்டுகள் கேட்காதே
தாத்தா செய்திகள் பார்க்காதே
டோலக் பூரில் நான்சென்று
சோட்டா பீமைப் பார்க்கணுமே !

சுட்கி ஜக்கு உடனுண்டு
குண்டுக் காலியா அவனுண்டு
கெட்டவ ருக்கு உதையுண்டு
கேலிக்கு மட்டும் அளவில்லை !

லட்டூ தின்றே பலம்பெறுவான்
ராஜா வுக்குத் துணைவருவான்
குட்டித் தங்கம் கேட்கின்றேன்
குடுகுடு வெனவா போட்டுவிடு !

-விவேக்பாரதி
 26.04.2015

Comments

Popular Posts