தந்திமிதோம் ஆட்டம்

அரனின் மகனை ! அழகன் எழிலைப்!
பரம குருவின் பதத்தைக் ! - கரத்தினில்
ஒத்தித் தொழுதே உயர்வைப் பெற்றிடுவோம் !
பத்தும் நமைச்சேரும் பார் !

பார்வதி மைந்தனைப் ! பார்திவனை ! தெய்வானை
மார்கொஞ்சும் வண்ண மயிலோனை ! - சீர்மேவுஞ்
செந்தமிழிக் கோமகனை ! சேவற் கொடியோனைச்
சிந்தித்தால் வாழும் சிரம் !

சிரத்தை முருகன் சிவந்த அடியில்
தரமாய்ப் பதிக்கத் தருவான் - வரமனைத்தும் !
சந்தங்கள் சிந்துந் திருப்புகழ் கேட்கையிலே
தந்திமிதோம் ஆட்டம் தினம் !

-விவேக்பாரதி
03.06.2015

Comments

Popular Posts