பனித்துள்ளி பள்ளியெழுச்சி

ஆருயிராம் நாட்டினிலே அமைதி யாக
   அயர்ந்துறங்கும் பனித்துளியே எழுவாய் மெல்ல
சீரியதோர் இயற்கைத்தாய் ஈன்ற அன்புச்
   சீதனமே கண்மலராய் எழில்வ னப்பே
பாரியையும் பேகனையும் கபிலன் பாட
   பனித்துளியே உனைப்பாட நானும் வந்தேன்
சூரியனும் உனைசேர வந்துள் ளானே
   சுடரொளியே திருப்பள்ளி எழுந்தரு ளாயே !

நடுநிசியில் நிலவுந்தான் தேய்வ தாலே
   நலிவுற்று நிலத்தாயும் சிந்திய நீரே
அடுக்கடுக்காய் வளர்ந்துநிற்கும் மலரி தழ்மேல்
   அனாமத்தாய் உறங்குகின்ற அதிசயத் தேனே
துடுப்பொத்த கொடியிடையாள் புல்லும் மெல்லத்
   தூங்குகையில் காற்றுவந்து சூட்டிய பூவே
படுத்துறங்கி யதுபோதும் கண்மல ராயே
   பளிங்கன்ன பட்டேபள் ளிஎழுந்தரு ளாயே !

-விவேக்பாரதி
16.09.2014

Comments

Popular Posts