பாரதியே


மகாகவியே நீயும் எங்ஙணம் சென்றனை ?
   மடமையும் சாதியும் பெருகிக் கொண்டே
தகாத துயரங்கள் செய்தவண்ணம் ! இவை
   தவிக்கச் செய்வன பாரதத்தை !

சாதிகள் இல்லையென்றே நீயும் சொல்லிய
   சந்தக் கவிதைகள் எங்குளவோ ?
மேதினி எங்கணும் சாதி நிறைந்திங்கு
   மீளாதத் துன்பந் தருகிறதே !

நாட்டினிலே பேதங்கள் கூடாதென்று நீயும் 
   நாவாரப் பாடிய உன்னழகுப்
பாட்டினிலே இந்தப் பாரத மக்களும்
   பாவப் பிழைகளைக் கண்டுவிட்டார் !

அலுவல் செய்யும் இடங்களிலும் இங்கே
   அற்ப சாதியின் பேதத்தில்! கை
குலுக்கிப் பேசுதல் கூடவோர் தீட்டென்று
   குற்றம் பலவன செய்யுகின்றார் !

புதுமைப் பரிசுகள் கிட்டுதுவே எனில்
   பூண்டிடும் சாதியைப் பார்ப்பதில்லை !
மதுவைக் குடித்திடும் அந்த இடத்திலும்
   மானுடர் சாதிகள் கேட்பதில்லை !


-விவேக்பாரதி
31.12.2013


Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1