சிலேடை - கடிகாரமும் மீனும்

நிற்காது என்றுமிது முட்களால் ஆனதிது
சற்றே தளராது ஓட்டத்தில் - உற்றுநோக்கி
கற்றால் இமைபொழுதும் சோரா தியங்கிடுமே
சுற்றும் கடிகாரம் மீன்

கடிகாரம்

என்றும் யாருக்காகவும் நிற்காது.

முட்களால் ஆனது.

சற்று கூட தளராது ஓட்டத்தில்.

உற்றுநோக்கி பார்த்தால்(கற்றால்) உலகே !இமைபொழுதும் சோராது இயங்கிடும்.

மீன்

ஓரிடத்தில் நிற்காது.

முட்களை எலும்புகளாய் ஆனது.

சற்று கூட தளராது நீரில் வட்டமிட்டுக் கொண்டே இருக்கும்.

உற்றுநோக்கி பார்த்தால்(கற்றால்) உலகே ! இமைபொழுதும் சோராது விளையாடிடும்!

-விவேக்பாரதி
24.04.2014

Comments

Popular Posts