படத்திற்குப் பா

அக்கினி சாட்சி

ஒரு நண்பர் கொடுத்த படத்திற்கு நான் யாத்த நேரிசை வெண்பா :

அக்கினி சாட்சியாய் மக்களும் வாழ்த்திட
இக்கனி சேர்ந்தாள் எனையுமே - இக்கணம்
தொட்டிவள் என்னுடை சொத்துதான் ! கண்களில்
சொட்டா தினிமேல்கண் நீர் !


-விவேக்பாரதி
04.09.2014

Comments

Popular Posts