முகவரி

முகவரி
வாழ்வின் முகப்பு பக்கத்தின்
முதல் வரி

மண்ணாண்ட மன்னனின்
வீரம், கொடை
மண்ணுகுக் கிடைத்த முகவரி

லயம், சுருதி
லட்சணத் தாளம்
பண்ணுக்கு கிடைத்த முகவரி
 
சோகமோ மகிழ்வோ
விழி உவந்து வெளிக் காட்டுவது
முகத்தில் அகத்தின் முகவரி !

விரிசல் பெற்ற
கரிசல் காடு
வறட்சியைச் சொல்லும் முகவரி !

மென்ஜாடையில் ! ஒரு
கண்ஜாடை வந்தால்
காதல் சம்மதத்தின் முகவரி !

பச்சை வயலும்
பளிங்குநீர்ச் சுனையும்
பசுமை விளைத்த முகவரி !

முகவரி கொடுத்த
தாய்நிலத்தைக் காப்பது
நம் நன்றியைச் சொல்லும் முகவரி

ஏனெனில்

முகவரி தான்
வாழ்வின் முகப்புப் பக்கத்தின்
முதல்வரி !

-விவேக்பாரதி
04.12.2013

Comments

Popular Posts