விழித்தெழு தோழா

ஏன் பிறந்தோம் - நாம்
ஏன் பிறந்தோம் ??
நமது பிறப்பின் கடமையை
ஏன் மறந்தோம்?

முள் விதைத்தோம் - நாம்
முள் விதைத்தோம்!
பூமித் தாயின் பொறுமையை
நாம் சிதைத்தோம்!

குண்டு போட்டோம் - நாம்
குண்டு போட்டோம் !
மனித நேயமெனும் கோபுரத்தை
நாம் சாய்தோம் !

பயிர் ஆறுத்தோம் - மானுட
உயிர் ஆறுத்தோம் !
இயற்கையைப் பாதுகாக்கும் வேலையை
நாம் வெறுத்தோம்!

இந்நிலை இன்னும் நீளா
திருக்க உடனே விழித்தெழு தோழா!

-விவேக்பாரதி
31.05.2013

Comments

Popular Posts