எந்திர உலகம்

ரோட்டோரம்
ரோந்துப் பணியில்
ரோபோக்கள் !

கலை வளர்க்கும் பெயரில்
கண்டவற்றை எல்லாம்
கலங்க வைக்கும்
கணினி !

இயங்கும் அனைத்திலும்
இயற்கைத் தன்மை இன்றி
இயந்திர மயமாக்கிய
இன்டர்நெட்!

அண்டை நாடுகளை
அழிக்க எண்ணியே
அறிவியலின் ஆயுதமாம்
அணுக்களை பயன்படுத்தும்
அறிவு அறிஞர்கள் !

இது தான்
இயல்பாக
இயங்கும் உயிர்களை
இலக்கின்றி தாக்கும்
இழிவு நிலை !
இயந்திர மாயமாகிய நாளைய உலகம் !

-விவேக்பாரதி
 24.10.2013

Comments

Popular Posts