வயல் வெளிகள் விலைக்கு
கரும் பேரண்டத்திலே
கட்டுக் கட்டாய்ப் போர்வைகளுடன்
நடந்து சென்றான்
நாம் தொழும் இறைவன் !
ஒவ்வொரு போர்வையையும்
கிரங்களில் ஒவ்வொன்றாய்
விரித்தே சென்றான்
வெண்மை எடுத்தான்
புதனில் விரித்தான் !
சுடர் இள மஞ்சளைச்
சுக்கிரனில் இட்டான் !
பூமி கண்டான் !
புதிய எண்ணம் கொண்டான் !
பச்சைப் போர்வையைப்
படக்கென்று விரித்தான் !
பசுமையானது உலகம்
அதன் பெயர் வயல் !
அனால் அந்தக் கடவுள்
படைத்த பிறவிகள் நாமோ
வயலுக்கு விலைபோட்டு
பருப்பு விளைக்காமல்
அரிசி போடாமல்
போட்டோம் வீட்டுமனை
உடனே விற்பனை !
விலைக்கு போனது வயலுடன்
விவசாயக் கலை !
எரியாமல் கிடக்கின்றது
உழவன் வீட்டு உலை !
-விவேக்பாரதி
15.11.2013
கட்டுக் கட்டாய்ப் போர்வைகளுடன்
நடந்து சென்றான்
நாம் தொழும் இறைவன் !
ஒவ்வொரு போர்வையையும்
கிரங்களில் ஒவ்வொன்றாய்
விரித்தே சென்றான்
வெண்மை எடுத்தான்
புதனில் விரித்தான் !
சுடர் இள மஞ்சளைச்
சுக்கிரனில் இட்டான் !
பூமி கண்டான் !
புதிய எண்ணம் கொண்டான் !
பச்சைப் போர்வையைப்
படக்கென்று விரித்தான் !
பசுமையானது உலகம்
அதன் பெயர் வயல் !
அனால் அந்தக் கடவுள்
படைத்த பிறவிகள் நாமோ
வயலுக்கு விலைபோட்டு
பருப்பு விளைக்காமல்
அரிசி போடாமல்
போட்டோம் வீட்டுமனை
உடனே விற்பனை !
விலைக்கு போனது வயலுடன்
விவசாயக் கலை !
எரியாமல் கிடக்கின்றது
உழவன் வீட்டு உலை !
-விவேக்பாரதி
15.11.2013
Comments
Post a Comment