எழிலி

எழில்மிகு மலைகளும் உண்டு - வண்ணம்
   ஏறிய வானவில் உண்டு
பொழில்தரும் தென்றலும் உண்டு - நாளும்
   பொலிவுறும் கதிரவன் உண்டு !
மழைதரும் முகிலினம் உண்டு - மண்ணில்
   மணந்திடும் வாசமும் உண்டு
கழைதரும் ராகமும் உண்டு - நானும்
   களித்தேன் இவைகளைக் கண்டு !

-விவேக்பாரதி
29.11.2014
 

Comments

Popular Posts