பெண் உரிமைக்குரல்


மங்கையாய்ப் பிறத்தல் பூமியிலே - ஒரு
மங்களப் பிறப்படி பொற்கிளியே - சிறு
புல்லென உன்னைக் கருதுவோர்க்குச் - சீரும்
புலியென உருவெடு கனியமுதே - சின்னக்
குழந்தைப் பருவத்தில் நீ பயிலும் கல்வி -எண்ணம்
பெரிதாய் வளர்க்கும் நீ காண்பாய் - இங்கு
வீதியில் நுழைக்காத வீணரையும் - உன்னை
வேலைக்கு அனுப்பாத மூடரையும் - உனக்கு
உரிமை தராத பேடி வழக்கத்தையும்
நீ வெறுத்து ஒதுக்கடி மாதரசி !!!

#பூர்வாங்கம்

-விவேக்பாரதி
24.05.2013

Comments

Popular Posts