சக்தி பரிசு

சக்திபுகழ் சாற்றுவையேல்
   சாதிப்பா யெங்கும் - தீச்
   சாக்கடைகள் மங்கும் - எழில்
   சாகரமாய்த் தங்கும் - அவள்
   சாந்தமுகம் போற்றுவையேல்
   சகலவரம் பொங்கும் !
பக்தியுடன் பணிந்துநின்றால்
   பயமணைத்தும் தீரும் - உடன்
   பாசம்வந்து சேரும் - புகழ்ப்
   பசுமையுறும் பாரும் ! - அவள்
   பாதங்களில் பன்னீர்பூ
   பரிசளிக்க வாரும் !

-விவேக்பாரதி
27.04.2016

Comments

Popular Posts