தாய் எனும் கோவில்

உயிர் என்னும் பரிசு
உணர்வெனும் பரிசு
உடலெனும் பரிசு
உன்னால் தான் வந்ததம்மா !

பத்து மாதம் கருவில் சுமந்து
வாழும் வரையில் நெஞ்சில் சுமந்து
கஷ்டங்களில் என்னை சுமந்து
உன் துயரம் தொலைத்தாய் அம்மா

ரத்தத்தை உணவாக அளித்து
உன் பாசமும் நேசமும் எனக்களித்து
சொந்தம் எனும் வாயில் மறந்து
என்னை நீ காத்தாய் அம்மா

நின் அருள் திருவருள் அன்றோ
நின் புகழ் விண்ணை விட பெரிதன்றோ !!

-விவேக்பாரதி
24.05.2016

Comments

Popular posts from this blog

கவிதை ஆண்டாள் - 1

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி