வீர விதை

வீரம் விதையாய் விழுந்ததினம் - இன்று
   வியனுல கிஃதும் அழுததினம்
பாரத நாட்டின் மாவீரன் - வீர
   பகத்சிங் இறையைச் சேர்ந்ததினம்

பஞ்சாப் கண்ட இளஞ்சிங்கம் - தோளில்
   பராக்கி ரமத்தை கொண்டவன்தான்
அஞ்சா நெஞ்சன் அன்றொருநாள் - வந்த
   ஆங்கி லேயனை எதிர்த்தவன்தான்

நாத்திகம் பேசிய நல்லறிவி - வாழும்
   நாட்டை ஆங்கிலர்க் கைவிட்டு
காத்திட வேண்டி உயிர்விட்டான் - இவன்
   கடமை கண்ணியம் போற்றுதுமே !

-விவேக்பாரதி
23.03.2015

Comments

Popular Posts