ஈந்துவக்கும் ஈத்

நோம்பிருப்போம் அல்லாவின் நாமங்கள் சொல்லியே
பூம்புனலாய் உள்ளத் தெளிவுருவோம் - காம்பின்மேல்
அல்லி அலரும் பிறையெதிர் பார்த்திருப்போம்
நல்லவைகள் ஈந்துவக்கும் ஈத்

என்னசொல்லி போற்றுதும் அல்லாவின் பேரருளை
இன்னல்கள் போக்கியருள் பாலிப்பான் - மன்னவனை
நாவாரப் பாடியே வீடுபேறு பெற்றிடுவோம்
பூவாசம் ஈந்துவக்கும் ஈத்

-விவேக்பாரதி
26.07.2014

Comments

Popular Posts