படத்திற்குப் பாக்கள்

நாணத்தைத் தள்ளுகொஞ் சம்

கண்ணே கனியமுதே கற்கண்டே பொக்கிசமே
பெண்குலத்தின் இன்பத் திடலேநீ - விண்மாறன்
பாணத்தை வைத்தாயே கண்ணில்! எனக்காக
நாணத்தைத் தள்ளுகொஞ் சம்

கையோடு கைசேர்ப்போம் வா

என்னை முழுதாய் இழுக்கும் விழியழகே
பொன்னை ஒத்ததே உன்வாக்கு - இன்னல்கள்
மையோடு உன்விரலைக் கண்டாலே ஓடிடுமே
கையோடு கைசேர்ப்போம் வா ! 


உறக்கம் தொலையச்செய் தாய்

உள்ளத்தில் உன்நினைவு கொல்லுதடா கண்ணாளா
உள்ளுக்குள் ஏதேதோ செய்யுதடா - கள்போல்
கிறக்கம் அடையுதடா என்மனது நீயும்என்
உறக்கம் தொலையச்செய் தாய் !


நல்விடியல் உன்னால் வரும்

ஏர்பூட்டி மண்ணைத் தழுவி விளையாடு
யார்உள்ளார் உன்னைத் தடுத்திட - பார்மக்கள்
நல்லதை உண்ணவே உன்னையும் அர்பணிப்பாய்
நல்விடியல் உன்னால் வரும் !

-விவேக்பாரதி
 22.04.2014Comments

Popular Posts