ஏசு

யூத நிலத்தினில் மாதர் குலத்தொளி
   மரியாள் கருவுற்றாள்
தூதன் உரைத்திட்ட நூதனப் பாவை
   இறையருள் பெற்றாள்
நாதம் முழங்கிட பேதம் விலகிட
   கிறித்துவ நன்னாளில்
வேதம் உரைத்திடும் மாதவன் ஏசுவும்
   மண்ணிடை பிறந்தாரே !

எருசெலம் என்னும் ஒருநன் னாட்டில்
   இயேசு பிறந்தாரே
ஒருதுய ரின்றி திருவரு ளோடு
   நன்கு வளர்ந்தாரே
இருநிலம் தன்னில் வரும்துயர் போக்க
   மலையில் பிரசங்கங்கள்
தருதலுக் காக மருளும்தன் வாழ்வை
   அற்பணித் திட்டாரே !

நிலுவையில் இருந்த வலுவுடை தீமைகள்
   தன்னைக் கலைத்தர்தர்க்கு
சிலுவையில் அண்ணல் னெலுவர்க ளாலே
   அறையப் பட்டாரே
பொலிவுடை மேனியும் வலியுடை தோள்களும்
   கொண்டதிருத் தூதன்
நலிந்தஅப் பாவிகள் பொலிந்தஅச் செயலுக்குப்
   புண்ணியம் கேட்டாரே !

-விவேக்பாரதி
30.08.2014

Comments

Popular Posts