நவராத்திரி

அடுக்கு அடுக்காய் படிகள் கட்டி
மிடுக்காய் பெண்கள் உடையணிந்தே - குடுகுடுவென
அண்டை வீட்டோரை அழைத்துக் காண்பித்து
சுண்டல் வழங்கும் திரு நாள்

பாசி போன்ற புன்னகை கொண்ட
காசியின் சிவன் மனைவி-ஊசி
மேலினில் தவம் கொண்டு அருள்
பாலிக்கும் நன் நாள் !

-விவேக்பாரதி
14.10.2013

Comments

Popular Posts