உலகாளச் செய்வேன்

கவிதை எழுதுவதற்கே
புவிமீது நான் பிறப்பெடுத்தேன்
காற்று ஓய்ந்தாலும் - இனிஎன்
கவிமழை ஓயாதே !

பாக்கள் புனைவதற்கே
பவனி வந்தேன் உலகில்
காக்கை குயிலினம் போல் - என்கவி
பாடல்கள் அடங்காதே !

தமிழைத் துதிபதற்கே
தரணியில் நான் பிறந்தேன்
வானம் விழுந்தாலும் - என்கவி
விழுந்து நொருங்காதெ !

தாய் தமிழ் வளர்ப் பதற்கே
எழுத்தினில் நான் நுழைந்தேன்
தோழமைகள் உடன் உண்டே - தமிழை
உலகம் ஆளச் செய்வேன் !

-விவேக்பாரதி
22.04.2014

Comments

Popular Posts