சிலேடை - பந்தும் மனதும்

அசைவுகள் ஆயிரம் காணும் ஒருநல்
தசையால் அதுஉரு வாகும் - இசையும்
திசையெல் லாம்இது பொய்ஆடும் ஒன்றாம்
விசையுறு பந்தும் மனது !

பந்து

தூக்கி எறிந்தால் அசைவுகள் ஆயிரம் காணும்.

நல்ல தசையான கையால் அந்த அசைவுகள் உருவாகும் .

தான் நினைக்கும் (இசையும்) திசையெல்லாம் சென்று துள்ளி ஆடும்.

மனது

ஒரு நிலையாக இல்லாமல் அசைவுகள் காணும்.

மூளை என்னும் நல்ல தசையால் அந்த அசைவுகள் உருவாகும்.

அது நினைக்கும் (இசையும்) திசையில் எல்லாம் சென்று ஆடும் .

-விவேக்பாரதி
22.04.2014

Comments

Popular Posts