கடுதாசி காணலையே

எந்த ஊரு நீயும் போன
என்னாசை மச்சானே!
என் தூக்கம் கெடுத்த உன்ன
கண்ணுக்குள்ள வெச்சேனே !

கள்ளடிச்ச போதையில
காட்டுவழிப் பாதையில
தள்ளாடித் தான்நடந்து
கீழ்விழுந்து விட்டாயோ?

என்னாடி உன்னோட
பெரும்பாடு எனநினைத்து
மன்னாதி மன்னனுக்கு
மந்திரியாப் போனாயோ?

கடல் வத்தி மீனு திங்க
கொடல் வத்தி செத்த கொக்கா
உடல் வத்திக் கெடக்கேனே
மடலால உயிர் பொழப்பேன்!

காத்துவந்து தீண்டிப் போக
காவேரி வருடிப்போக
காத்திருந்தேன் பாத்திருந்தேன்
காதல் தவிச்சிருந்தேன்!

படுத்துறங்கி நாளாச்சு
பட்டினிபல பாத்தாச்சு
கடுதாசி இன்னும் வரக்
காணலையே ஆச மச்சான்!

படுத்துதையா உன்நினைவு
பாவி என்னக் கொல்லுதைய்யா
கடுதாசி போட்டுவிடக்
காலமென்ன ஆச மச்சான் !

-விவேக்பாரதி
23.07.2014

Comments

Popular Posts