என்னவளே

என்னவளே அடி என்னவளே
உன்னை எங்கு நான்
கண்டறிவேன் ?

எந்த இடம் உந்தன்
சொந்த இடம் ? அதை
யாரிடம் கேட்டறிவேன் ?

காற்றைக் கேட்டேன் ! அந்த
கடலைக் கேட்டேன் ! சுற்றும்
காக்கைகளைக் கேட்டேன் !

மலையைக் கேட்டேன்
மலரைக் கேட்டேன்
மாந்தோப்பினையும் கேட்டேன் !

நீ இருக்குமிடம்
யாருக்கும் தெரியவில்லை
திக்கு முக்காடி நானும் நின்றேன் !

வாயைக் கட்டி ! எந்தன்
வயிற்றைக் கட்டி சேர்த்த
செல்வங்கள் நிறைய உண்டு !

வயிற்றுக்கு வேண்டி வருபவர்க்கு
தருமம் வழங்கிட மனது முண்டு !

காத்திருக்க எதிர் பார்த்திருக்க
காதல் ததும்பும் நெஞ்சு முண்டு !

கண்ணிமை போல உன்னை தாங்க
என் தேகத்தில் வலிமை யுண்டு !

உன்னைக் கொஞ்சிட
உன்னிடம் கெஞ்சிட
கவிதைகள் அதிகம் உண்டு !

பள்ளியில் உன்னிடை
கிள்ளிட சில்மிஷ விரல்கள் உண்டு !

கோகிலம் போலவே என்னிடத்தை
உனக்காக மாற்றி வைப்பேன் !

கோபுரத்தில் உன்னை அமர்த்திவிட்டு
உனக்கு சேவைகள் புரிந்திடுவேன் !

வெண்ணிலவின் வெண் திரை கழற்றி
உனக்கு போர்வைகள் செய்திடுவேன் !

வருடமெல்லாம் நீ கிழிக்கின்ற
நாள்காடியாய் நான் இருப்பேன் !

நாள்தோறும் புதுமுகம் கொண்டுதான்
இன்பத்தைத் தந்திடுவேன் !

உன் காலிலே கொளுடின் மணியைப்போல்
மாறியே தூங்கிடுவேன் !

-விவேக்பாரதி
12.05.2014

Comments

Popular Posts