மழையே வா
மேகம் தூவும் கண்ணீர் மழைதான் !
மேனி நனைத்திட வேண்டும்!
வேகக் காற்றும், புனல்நீர், ஊற்றும்
விரைவில் குளிர்ந்திட வேண்டும் !
தாகம் தீர்க்கும் தண்ணீர் அமுதம்
தடையிலாது வர வேண்டும் !
காகம் கவிழ்த்த காவிரி நதிபோல்
கரையுடைத்து வா மழையே !
யாகம் செய்தோம் யார்தான் உன்னை
வெறுப்பார் வாவா மழையே !
மோகனப் பொலிவே உனைவிட உலகில்
மோட்சம் ஒன்றும் இலையே !
-விவேக்பாரதி
06.02.2014
மேனி நனைத்திட வேண்டும்!
வேகக் காற்றும், புனல்நீர், ஊற்றும்
விரைவில் குளிர்ந்திட வேண்டும் !
தாகம் தீர்க்கும் தண்ணீர் அமுதம்
தடையிலாது வர வேண்டும் !
காகம் கவிழ்த்த காவிரி நதிபோல்
கரையுடைத்து வா மழையே !
யாகம் செய்தோம் யார்தான் உன்னை
வெறுப்பார் வாவா மழையே !
மோகனப் பொலிவே உனைவிட உலகில்
மோட்சம் ஒன்றும் இலையே !
-விவேக்பாரதி
06.02.2014
Comments
Post a Comment