கவியரசன்

செந்தமிழ்ச் சுவையில் வல்லோன் !
சுடர்விடும் எண்ணம் பல கொண்டோன் !
கடல் மேலே பாறையை
மிதக்கச் செய்யும்
கலைகளிலே பாரிலே நல்லோன் !

பாட்டுக் கொரு புலவன்
தீந்தமிழில் கவி சொன்னான் !
வீண் சாத்திரங்கள் எதிர்த்தான் !
வான் உயர்ந்த புகழ் வளைத்தான் !

தலையினிற் ஒரு பாகை
ஒளிரும் கண்களிலே கந்தப் பார்வை
களிறும் அஞ்சும் வண்ணம் மீசை கொண்ட
கவியரசன் இவன் கண்டீர் !!

-விவேக்பாரதி
31.05.2013

Comments

Popular Posts