தை வரவால்

தைப்பொங்கல் பொங்கட்டும் ! தரணிமிசை நலன்களுமே
வைகறையின் புதுமலராய் வாய்திறந்து சிரிக்கட்டும் !
தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்றந்த முன்னோர்கள்
கைகளினால் தீட்டியதும் கண்டிப்பாய்ப் பலிக்கட்டும் !

மார்கழியும் மண்விட்டு மெல்ல உறங்கிவிட
ஏர்முனையில் பயிர்செய்யும் ஏற்றமிகு உழவர்களைப்
பார்போற்றப் புகழ்செய்து பாக்களினால் பாராட்டி
சீர்மிகுந்த மரியாதை செய்திடுவோம் இந்நாளில் !

இன்றுண்ணும் செங்கரும்பைப் போலென்றும் தித்திப்பாய்
நன்றாய்நாம் இன்சொற்கள் மனமுவந்து பேசிடுவோம்
என்றும்நாம் கொடுஞ்சொற்கள் எப்போதும் தவிர்த்துவிட்டால்
அன்னையவள் பராசக்தி அருளதனைச் சாற்றிடுவாள் !


-விவேக்பாரதி
15.01.2015

Comments

Popular Posts