சக்தி சரணம்

வெற்றிக் கனியமுதே - உனை
   எட்டிப் பறித்திடவே
நெற்றிக் கண்ணன் துணைவி - "பரா
   சக்தி சரணம்" என்றேன்
சுற்றி வரும் வினைகள்  - சுக்கு
   சுக்காய் வீழ்ந்திடவே !
உற்றதொரு பார்வை - பார்ப்பாள்
   உன்னதம் பெற்றிடுவேன் !

வாழ்தலை வேண்டி நிதம்  - அவளின்
   வாழ்த்துக்கள் தேடி நின்றேன்
தாழ்வு தரா உமையாள் - எனக்குத்
   தந்தனள் நன்மைகளை !
ஊழ்வினை நற்பயனை - அவளே
   உண்மை என்றாக்கி விட்டாள்
தாழ்வுறும் வேளையிலும் - அவளைத்
   தமிழில் போற்றிடுவேன் !

விவேக்பாரதி
21.01.2104

Comments

Popular Posts