அழகான வாழ்க்கை

பச்சை தண்ணீரில் குளிய லிட்டு
கச்சை யுடுத்தி பூவும் வைத்து
மாமியா ருக்கு காபி கொடுத்து
சாமி கும்பிட்டு ! மாம னாரின்
சக்கரை இல்லா இஞ்சி டீயை
அக்கறை யோடு கொடுத்து பின்பு
என்னாசைக் கணவன் குளிப்ப தற்கு
வெண்ணீர் வைத்து காபி மற்றும்
ஆசைக் கொஞ்சலொடு எழுப்பி விட்டு
மீசை முறுக்கிவிட்டு அதை ரசித்து
செல்லப் பெண்ணைக் குளிக்க வைத்து
நல்ல நெய்யுடன் சோறு ஊட்டி
சடையும் பின்னி சாப்பாட் டைத்தான்
அடைத்த டப்பாவை பையில் வைத்து
கணவருக்கு பிடித்த தானமணம்
மணக்கும் நெத்திலிக் குழம்பு தன்னை
டப்பாவில் வைத்துக் ! கதவோரம் நின்று
எப்போதும் போல வழி அனுப்பி
துள்ளித் திரியும் ஆசைப் பெண்ணை
பள்ளிவா கனத்தில் ஏற்றியும் விட்டு
வீட்டுக்குள் ளேவந்து சோபாவில் அமர்ந்துப்
பாட்டுப் படித்தேன் பெருமூச்சில்
எந்தன் அழகான வாழ்க்கை ஆனந்தமே !

-விவேக்பாரதி
25.08.2014

Comments

Popular Posts