முத்தத் தருணம்

என்னவள் மேனியைப் பற்றி - அவள்
   ஏந்தும் உதட்டினி்ல் என்னிதழ் ஒற்றி  
கன்னல் உதட்டினில் மேலே - புதுக்
   காவியம் ஆக்கினேன் பாவலன் போலே !

அன்னவள் நாணமும் கொண்டாள் - உடன்
   அங்கே உதட்டைக் கண்ணாடியில் கண்டாள்
என்னடி என்றதும் பொன்னாள் ! - இதழ்
   ஏறிய பாவைப் படித்ததாய்ச் சொன்னாள் !

-விவேக்பாரதி !
23.03.2016

Comments

Popular Posts