செத்துவிட
செத்துவிட நெஞ்சம் துடிக்குதடி - பெண்ணே
கத்திநிதம் உள்ளம் கரையுதடி !
முத்துச் சிரிப்பழகி ! முழுநிலவு முகத்தழகி !
முந்தானைக் கொசுவத்தில் என்னை முடிந்தவளே !
பத்து மாதங்களாய் பதிலுக்காய்க் காத்திருந்தேன்
பட்டென்று என்னைப் பிடிக்காது என்றுரைத்தாய் !
யுத்தம் நடக்குதடி ! உள்ளத்து விளிம்பினிலே
உன்னை நினைக்கையிலே உள்ளம் கொதிக்குதடி !
ரத்தம் வடியுதடி ! ரணமடி என்னிதயம் !
ராப்பகலாய்க் காத்திருந்த காதல்மனம் கத்துதடி !
கவிதைகள் பலசொன்னேன் கனவினிலே உன்னோடு
கதைத்துக் களித்திருந்தேன் ! பிடிக்காது என்றுரைத்தாய் !
தவிப்பினிலே வெந்தமனம் தள்ளாடி நடக்குதடி !
தாய்பிரிந்த செய்போலே தானழுது துடிக்குதடி !
கவிதையிலே அழுதுவிட்டேன் கற்பனையில் கதறிவிட்டேன்
கவின்மலரே உன்முன்னே கனவிலுமே வரமாட்டேன் !
புவியினிலே நீயின்றி இன்னொருத்தி என்வாழ்வில்
புகுந்திவிடப் போவதில்லை சாகும்வரை உன்னினைவே !
-விவேக்பாரதி
08.03.2015

Comments
Post a Comment