தமிழ் அழகு

பொன்னை அழகென்றேன் பொற்கால ஓவியங்கள்
தன்னை அழகென்றேன் நானுந்தான் - என்னசொல்ல
மின்னலிடைப் பெண்கள் அழகென்றேன் ! பின்னறிந்தேன்
அன்னை தமிழ்தான் அழகு !

ஆங்கிலம் பேசல் அழகேன்றீர் ! பண்புகொள்ளும்
பாங்கில் அவன்செய் வதுசெய்தீர் - தாங்கிய
அன்னைமார் ஊட்டிய பாலை மறப்பதுவோ
அன்னை தமிழ்தான் அழகு !


-விவேக்பாரதி
31.05.2014

Comments

Popular Posts