சக்தி காப்பாள்

சக்தியின் பொற்பதம் தன்னை
பக்தியே மிக்கநெஞ் சோடு
இக்கணம் தொட்டுநாம் சேர்வோம்
முக்திதந் தேநமைக் காப்பாள் !

வாயினால் வாழ்த்துரை செய்தே
தூயிரும் மென்மலர் ஒத்த
தாயிவள் நாற்கரம் காண்போம்
நோயிலா தேநமைக் காப்பாள் !

-விவேக்பாரதி
14.09.2014

Comments

Popular Posts