வள்ளுவக்குறள்

ஈரடிப் பாக்களால் பூமி திருத்தினார்
நூறடி நின்றது புகழ் !

புகழிருந்து செய்யும் செயலெல்லாம் செய்து
திகழுகிறார் காலத்தை வென்று !

வென்றார் தமிழால் புவிமக்களை நின்றபடி
சென்றார் விசும்பைக் கடந்து !

கடந்துபோன காலத்தின் வாழ்வினைத் தேவர்
திடத்தமிழ் பாட்டிலே காண் !

விவேக்பாரதி
15.01.2014

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1