நிலவந்தாதி

பிறைநிலவுப் பேரழகி அரைவட்ட முகங்காட்டி
நிறைவேனவே வருகின்றாள் ! இரவுகளில் ஒளிர்கின்றாள்
குறையென்ன வந்ததுவோ ? கும்மிருட்டில் ஒருநாளில்
மறைந்தேதான் போகின்றாள் ! மறுபடியும் வளர்வாளே !

வளர்ந்திட்டால் போதும் வஞ்சியிவள் நெஞ்சினிலே
வளர்திடுவாள் புதுமோகம் ! வளைந்திடுமே என்தேகம் !
கிளர்ச்சிபல செய்தென்னை கிறுக்கனென ஆகிடுவாள் !
தளர்த்திலாள் அவள்மௌனம் ! தாங்குமோ என்நெஞ்சே !

நெஞ்சத்தோடு இனிப்பால் நெழிவு சுழிவற்றாள்
மஞ்சத்தில் வான்மேகம் ! மாமனவன் சூரியனும்
கொஞ்சித்தான் பூத்திருப்பாள் ! என்னையும் பார்த்திருப்பாள் !
கெஞ்சிநானும் கவிசெய்தால் கேட்டுக் களிப்பாளே !

களித்திருப்பாள் இரவுகளில் ! காதல் மீன்களுண்டு
வளிப்போக்கில்செல்கின்ற வழிப்போக்கர் மேகங்கள்
அளிக்கின்ற காதல்ரசம் தன்னை ஒன்றாக்கி
துளிபனியாய்த் தூங்குகின்ற பூவில் இறக்கிடுவாளே !

-விவேக்பாரதி
02.10.2014

Comments

Popular Posts