அலைத்தாய் மகள்
ஓயாமல் கரங்கள் நீட்டிக்
ஒசைக ளோடு பேசும்
தாயேநீ என்னை வந்து
பிடிபார்ப்போம் என்று சொல்லி
வாயோடு நகையும் தழுவ
வாவென்று கைநீட் டித்தான்
தேயாத நிலவு முகத்தாள்
ஓடித்தான் வருகின் றாளோ
பிஞ்சுக்கால் மண்ணில் பட்ட
பின்புடனே மண்ணும் பொன்னாய்
கொஞ்சந்தான் மாறி விட்ட
கோலத்தை என்ன சொல்வேன் !
நெஞ்சத்தில் அவளை வைத்து
நெய்வடியும் கவிதை செய்தேன்
கொஞ்சுதமிழ் குதித்து வந்து
குடிபுகுந்தாள் என்கைக் குள்ளே !
-விவேக்பாரதி
03.08.2014
ஒசைக ளோடு பேசும்
தாயேநீ என்னை வந்து
பிடிபார்ப்போம் என்று சொல்லி
வாயோடு நகையும் தழுவ
வாவென்று கைநீட் டித்தான்
தேயாத நிலவு முகத்தாள்
ஓடித்தான் வருகின் றாளோ
பிஞ்சுக்கால் மண்ணில் பட்ட
பின்புடனே மண்ணும் பொன்னாய்
கொஞ்சந்தான் மாறி விட்ட
கோலத்தை என்ன சொல்வேன் !
நெஞ்சத்தில் அவளை வைத்து
நெய்வடியும் கவிதை செய்தேன்
கொஞ்சுதமிழ் குதித்து வந்து
குடிபுகுந்தாள் என்கைக் குள்ளே !
-விவேக்பாரதி
03.08.2014
Comments
Post a Comment