இரவென்று

சித்திரை மாதம் இளவெயில் நேரம்
   சிவந்திடும் வான்விளிம் போரம்
முத்துநி கர்த்தாள் மொய்குழல் கொண்டாள்
   முழுமதி முகமதைக் காட்ட
நித்திரை தோன்றும் இரவென எண்ணி
   நீலவான் கருமையுற் றிங்கே
மொத்தவூர் தூங்க முழித்ததோ எங்கள்
   மொட்டனை நால்விழி தானே !

-விவேக்பாரதி
26.10.2015

Comments

Popular Posts