முத்தத்தேன்


சொப்பனத்தில் அற்புதமாய் சொலிக்கின்ற பெண்ணேஉன்
சிப்பிமுத்து முத்தத்தின் தேன்சுவையை நான்புகழ
முப்பாலை நான்குடித்து முத்தமிழைத் தான்படித்து
தப்பில்லாத் தரத்தினிலோர் தமிழ்க்கவிதை செய்துவைத்தேன்

செய்துவைத்த கவிதையிலே ஜீவனெல்லாம் நான்நிரப்பக் 
கொய்துவைத்த மலரென்று குறிதவறி வண்டினங்கள்
மெய்துவைத்து தேன்தேட, விழியசைத்து நீயழைக்க 
பொய்தவிர்த்த உன்னுதட்டில் தேனெடுப்பேன் சம்மதமா? 

விவேக்பாரதி
22.04.2014

Comments

Popular Posts