கெண்டைவிழி கண்டவுடன்...


மீன்சென்று தாமரையை முத்தமிடும்! காதலுடன்
மான்சென்று புல்வெளியைத் தான்தழுவும் - தேனுகரும்
வண்டுபோய் மல்லிகையில்  கள்ளிறக்கும்! என்னவள்
கெண்டைவிழி கண்ட வுடன்!

-விவேக்பாரதி

Comments

Popular Posts