பார்வை வைத்தியம்

காதல் விழிகொண்டு
என்னை அவள் பார்க்கும்
சாதகப் பார்வைப்
பச்சை !

கோவத்தின் உச்சத்தில்
ஏறி நின்றால் ! பார்வை
கொவ்வை நிறஞ்
சிவப்பு !

மோகத்தில் என்னை
தாகம் தனியப் பார்க்கும்
மோகனப் பார்வை
நீலம் !

மொத்தமாய் பைத்தியம்
பிடித்த எனக்கு வைத்தியம்
அவள் கண்கள் தான்
குணசீலம் !

-விவேக்பாரதி
24.04.2014

Comments

Popular Posts