அலர்ந்த காட்சி

தேகந் தழுவுந் தென்றலிற் பூமணம்
மோகங் கிழப்பிட ! மொய்த்திடும் வண்டினம்
பூவைச் சுற்றிடப் , பூந்தேன் பருகிட
நாவை அசைத்து நகர்ந்திடுங் காலை
வண்டினம் வீசிடும் வளயிறக் கையில்
அண்டிய தூசும் அழகாய்க் காற்றிற்
கலப்ப தொப்பவே கன்னியே நின்விழி
மலர்ந்தென தின்விழி யோடு
அன்றொரு நாள்சேர்ந் தலர்ந்த காட்சியே !
 
-விவேக்பாரதி
24.09.2015

Comments

Popular Posts