வந்தனம் ஹிந்துவே

பாரதம் முழுதும் சுற்றி வந்த
"தி ஹிந்து" பத்திரிக்கைப் பெண்
சாரதியாக ஆக்கிக் கொண்டாள்
மானிடம் போற்றும்
தமிழ் மொழியை !

இனி
மண்னுள் நடக்கும்
குணமான அத்தனையும்
தன்னுள் அடக்கிக்
காட்டிடுவாள் !

தமிழ் மொழியை
வளரக் செய்வாள்  !!
பாரதிதாசன்
அமிழ்தெனச் செப்பிய
பத்திரிக்கை !

இவளால் வையம்
முத்தமிழை இனி
முப்பரிமாணத்தில் கண்டு கொள்ளும் !

தமிழ் ஹிந்துவே !! 




வருக வருக
உலகிற்குத் தமிழின்பம்
தருக தருக
என்று வாழ்த்துகிறேன் !!

-விவேக்பாரதி
30.09.2013

("தி ஹிந்து தமிழ்" வெளியானதைப் பாராட்டி எழுதியது) 

Comments

Popular Posts